Monday, June 20, 2011

தமிழில் டைப் செய்ய


கணனியில் மிக எளிதாகவும் மிக நேர்த்தியாகவும் நமது பதிவுகளை தமிழில் எவ்வாறு இடுவது என்கின்ற ஏக்கம் நம் அனைவருக்குமே உண்டு, அதற்கேற்றவாறு பல இணையத்தளங்களும் பல மென்பொருட்களும் உண்டு,

NHM Writer என்கின்ற இந்த மென்பொருள் அவ்வகையை சேர்ந்ததுவே, ஆனால் இதில் Type பண்ணுவதற்கு மிக எளிதாக உள்ளது.

முதலில் இத்தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



தரவிறக்கம் செய்த கோப்புவை ரன் செய்யவும் பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

1.Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

2. இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


3. Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


4. இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


5. Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


6. உங்களுக்கு தேவையெனில் Create a Desktop Icon அல்லது Create a Quick Launch Icon என்பதை தெரிவு செய்யலாம்


7. NHM Writer உங்கள் கணனியில் நிறுவப்படும்.

OK இப்போது இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்போம்
NHM Writer பயன்படுத்த கணணியின் கீழ் பகுதியில் உள்ள Toolbarரில் வலது மூலையில் மணி போன்ற
ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.
மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு
தேர்வு செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.
தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key
மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது? NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.
தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது.
அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும். யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது? எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்
உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும்.நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.


பயன்படுத்தும் முறை: இதனைப் பயன்படுத்தும் முன்பு தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு ரகசியம், மெய்யெழுத்தும், உயிர் எழுத்தும் சேர்ந்துதான் உயிர் மெய் எழுத்து உருவாகின்றது என்பது. இது ஊருக்கே தெரிந்த ரகசியம் என்கின்றீர்களா. அவ்வளவுதான்.. இது தெரிந்தால் போதுமானது. அதன் பிறகு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, எந்த தமிழ் எழுத்துக்கு எந்த ஆங்கில எழுத்து(கள்) பொருந்தும் என்பது. தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களுக்குமே தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18 மற்றும் ஆயுத எழுத்துக்கு மட்டும் தெரிந்தால் போதும். கூடவே நான்கு வட மொழி எழுத்துக்களுக்கும் தெரிந்து கொள்ளுங்கள். நிறையப் பயன்படும்.

இப்போது எப்படி டைப் செய்வது என்றுப் பார்க்கலாம். மேலே இரண்டு பெட்டிகள் உள்ளன. கீழே இரண்டாவதாக உள்ள பெட்டியில்தான் நாம் ஆங்கிலத்தில், இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். நாம் டைப் செய்யும் ஆங்கில வார்த்தைகளுக்கு ஒத்த தமிழ் டிரான்ஸ்லிட்டரேஷன் மேலே உள்ள பெட்டியில் தோன்றும். கீழ் உள்ளப் பெட்டியில் ஆங்கிலத்தில் 'mother' என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' என்று வராது. நிறையப் பேர் இந்தப் பெட்டி, மொழிபெயர்ப்பு (Translation) செய்யும் என்று எண்ணிக் கொள்கின்றனர். அப்படியல்ல. தமிழை அப்படியே அதற்கு இணையான ஆங்கில வார்த்தைகள் கொண்டு டைப் செய்ய வேண்டும். அதனால்தான் தமிங்கிலம் என்று குறிப்பிட்டு உள்ளேன். சரி, இதனைப் பயன்படுத்தி 'அம்மா' என்பதை எப்படி டைப் செய்வது?. மிகவும் எளிது. 'அ' விற்கான ஆங்கில எழுத்து a. 'ம்' க்கு m. அடுத்த எழுத்தில்தான் விசயம் உள்ளது. 'மா' விற்கான ஆங்கில எழுத்து மேலே அட்டவணையில் இல்லை. எப்படி டைப் செய்வது? உயிர்மெய் எழுத்தின் சூத்திரத்தை நினைவு கொள்ளுங்கள். ம் + ஆ என்பதே மா. இது தெரிந்தால் எளிது. இப்போது ம் க்கு மீண்டும் ஒருமுறை m டைப் செய்யவும். ஆ விற்கு A அல்லது இருமுறை aa என்று டைப் செய்யவும். உங்களுக்கு அம்மா கிடைத்துவிடும். அதாவது கீழே உள்ள பெட்டியில் ammA அல்லது ammaa என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' வருவார். மூன்று எழுத்தினை டைப் செய்ய இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா என்று சோர்ந்து விடாதீர்கள். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விளக்கம் சற்று அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இது மிகவும் எளிதான விசயம். சற்று பொறுமையுடன் இரண்டு பக்கங்களை டைப் செய்து பழகிக் கொண்டீர் என்றால் போதுமானது. அதன் பிறகு மிக வேகமாய் டைப் செய்ய இயலும். ஒரு சில வார்த்தைகளை பலவிதமாக டைப் செய்யலாம். உதாரணமாக, அம்மாவிற்கு அடுத்த ஆட்டினை எடுத்துக் கொள்வோம். ஆடு என்பதை எப்படியெல்லாம் டைப் செய்யலாம் என்று பாருங்கள். ஆடு - Adu அல்லது aadu அல்லது Atu அல்லது aatu. உங்களுக்கு எது எளிதோ அதன்படி டைப் செய்து கொள்ளுங்கள். அடுத்த முக்கியமான விசயம். தமிழ் வார்த்தைகளுக்கு நடுவில் ஆங்கில வார்த்தைகள் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் கீழே உள்ளப் பெட்டியில் தமிழில் டைப் செய்ய வேண்டிய அனைத்தையும் டைப் செய்து முடித்து விட்டு, அதன் பிறகு மேலே உள்ள பெட்டிக்கு வந்து தேவையான இடங்களில் ஆங்கில வார்த்தைகளைச் சேர்க்கவும். மேலே ஆங்கில வார்த்தைகள் சேர்த்த பின்பு, கீழே உள்ளப் பெட்டியில் ஏதேனும் டைப் செய்தீர்கள் என்றால், மேலே சேர்த்த ஆங்கில வார்த்தைகள் மறைந்துவிடும். கவனத்தில் கொள்ளவும். இதற்கு உதாரணம். "இது மிகவும் interesting ஆக இருக்கு." என்பதை டைப் செய்ய வேண்டும் என்றால், முதலில் கீழே உள்ளப் பெட்டியில் "இது மிகவும் ஆக இருக்கு" என்பதை மட்டும் தமிங்கிலத்தில் டைப் செய்யவும். அதாவது, ithu mikavum aaka irukku. இப்போது மேலே உள்ளப் பெட்டியில் 'இது மிகவும் ஆக இருக்கு' என்பது தோன்றியிருக்கும். பிறகு மேலே வந்து "மிகவும்" க்குப் பக்கத்தில் ஆங்கிலத்தில் interesting என்பதை டைப் செய்யவும். நாம் சாதாரணமாக தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எப்படி எழுதுவோமோ அப்படியே டைப் செய்யவும். பெரும்பான்மையான எழுத்துக்கள் ஒத்து வரும். ஒரு சில எழுத்துக்கள் மாறுபடும். குறிப்பாய் சொல்ல வேண்டும் என்றால், 'ந்'. மூன்று இன் (ந், ண், ன்) இருப்பதால் இந்தப் பிரச்சனை. ன் ற்கு n ம், ண் ற்கு N ம் ஒதுக்கப்பட்டு விட்டதால், 'ந்' ற்கு சற்று வித்தியாசமாக w ஒதுக்கப்பட்டுள்ளது. n- என்பதையும் பயன்படுத்தலாம். பழக்கத்தில் மிக எளிதாய் வந்துவிடும்.

வலைப்பூவில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம்.

இதற்கு முன்னைய பதிவில் வலைப்பூவை மொபைலில் பார்ப்பது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா? உயர்ந்த ரக மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நமது வலைப்பூவை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கும் வேகமாகப் படிப்பதற்கும் ஏற்றபடி மாற்ற Mobile Templates என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு தனியாக பிளாக்கர் டிராப்ட் தளத்தில் போய் செய்ய வேண்டியிருந்தது. தற்போது பிளாக்கர் தளத்திலேயே செய்து கொள்ளும் படியாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதைச் செய்ய Blogger Settings-> Email and Mobile Templates என்பதில் சென்று Yes.On Mobile devices என்பதைக் கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யலாம். பக்கத்திலேயே இருக்கும் Preview பட்டனைக் கிளிக் செய்து உங்கள் வலைப்பூ மொபைலில் எப்படி காட்சியளிக்கும் என்றும் பார்த்துக் கொள்ளலாம். இதில் என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.

1. இனிமேல் மொபைலில் இருந்து யாரேனும் உங்கள் வலைப்பூவைப் பார்த்தால் நேரடியாக வலைப்பூவின் மொபைல் பதிப்புக்கு கொண்டு செல்லப்படும். தேவைப்பட்டால் முழுதும் பார்க்க Standard web version ஐ மொபைலில் பார்த்துக் கொள்ளலாம்

2. இந்த மொபைல் பதிப்பில் பிளாக்கரின் 27 வகையான டெம்ப்ளேட்கள் ஆதரவளிக்கப்படுகின்றன. நீங்கள் தற்போது எந்த வகையான டெம்ப்ளேட் பயன்படுத்தினாலும் அதனைப் பொதுவான முறையில் காண்பித்து விடும். ஆனால் Blogger Layout Template களைப் பயன்படுத்தி வந்தால் அதே தோற்றத்தில் பார்க்க முடியும்.

3. இதில் ஆட்சென்ஸ் விளம்பரங்களைப் பார்ப்பதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொபைல் வழியிலும் வருமானம் வரக்கூடும். ஆனால் பதிவுகள் இருக்கும் மேல் பகுதியிலும் முகப்புப் பக்கத்தின் அடியிலும் மட்டுமே காட்டப்படும். அதாவது நீங்கள் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் வைத்திருந்தால் காட்டப்படும்.

4. மொபைல் மூலம் பதிவின் கருத்துரைகளைப் (Comments) படிக்க முடியும். புதிய கருத்துரைகளைச் சேர்க்க முடியும். இனி அவசரத்திற்கு மொபைலிலேயே கருத்துகளை இட்டுக்கொள்ளலாம்.

5. பதிவுகளில் வீடியோ எதேனும் இணைத்திருந்தால் அதனையும் நமது வலைப்பூவிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம். (Video Supporting)

இதைப்போல இந்த வருடத்தில் புதுமையான மாற்றங்களை வலைப்பூவில் கொண்டு வரப்போகிறது கூகிள். தயாராக இருங்கள்.

வலைப்பூவை கைப்பேசியில் பார்க்க

இணையத்தை விட மொபைல்களின் வளர்ச்சி அதிகமான எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது. ஒரே கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என மொபைலிலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன. நமது வலைப்பக்கமானது இணைய உலவிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் நமது வலைப்பூவை மொபைலில் பார்க்கும் போது தெளிவான இட அமைப்புடன் தெரிவதில்லை. இனி மொபைல் துறையின் அபார வளர்ச்சியில் பலரும் இணையதளங்களைத் தேடி கணிணிக்குச் செல்லாமல் மொபைலிலேயே பார்த்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. வலைப்பூவை மொபைலிலும் பார்ப்பதற்கு ஏற்றபடி அமைப்புகளை அமைத்து விட்டால் பல பேர் பயனடைவார்கள். இதற்கு எந்த நிரல்வரிகளும் உங்கள் வலைப்பூவில் சேர்க்க வேண்டியதில்லை. பிளாக்கர் சேவையே இதை எளிமைப் படுத்தியுள்ளது. இதனை எப்படிச் செய்வது?

1. இவ் இணையதளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழையவும்
2. Settings -> Email & Mobile என்ற பகுதிக்குச் செல்லவும்.
3.3. பின்னர் Show Mobile Template என்பதற்கு நேராக உள்ள Yes. On mobile devices, show the mobile version of my Template என்பதைத் தேர்வு செய்து சேமித்துக் கொள்ளவும்.

4. மொபைலில் உங்கள் தளம் எவ்வாறு தெரியும் என்பதை அறிந்து கொள்ள அருகிலேயே உள்ள Mobile Preview என்ற பட்டனைக் கிளிக் செய்து பார்த்துக் கொள்ள முடியும்.


Sunday, June 19, 2011

Free Opener


நாம் கணணியில் பல்வேறு வகையான போர்மட்டுடைய கோப்புக்களை பயன்படுத்துகின்றோம்.

உதாரணமாக பொட்டோ, ஓடியோ, வீடியோ, PDF, OFFICE கோப்புக்கள் என பல இவற்றை ஓபன் செய்து கொள்வதாயின் அந்தந்த கோப்புக்களை திறக்க பயன்படும் மென்பொருட்களிலே திறக்க முடியும்.

பலதரப்பட்ட கோப்புக்களை ஓரிடத்தில் ஓபன் செய்துகொள்ள துணைபுரிகிறது FREE OPENER என்ற மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் 70க்கும் மேற்பட்ட வகையான கோப்புக்களை திறந்து கொள்ள முடியும்.

இதன் சிறப்பம்சம்:

1. JPEG,GIF, bmp போன்ற போர்மட் உடைய புகைப்படங்களை திறந்து பார்க்க முடியும்.

2. avi, flv, mid, mkv, mp3, mp4, mpeg, mpg, mov, wmv போன்ற மீடியா கோப்புக்களை திறந்து மீடியா பிளேயராக பயன்படுத்த முடியும்.

3. photoshop, pdf, html, office, java , DOC, xls போன்ற கோப்புக்களையும் இலகுவாக திறந்து கொள்ளலாம்.

இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தில் செயற்படவல்ல மிக சிறந்த பயனுள்ள ஓர் மென்பொருளாகும். அத்துடன் இதன் அளவு 20MB ஆகும்.


இணையதள முகவரி

PDF கோப்பின் ஒவ்வொரு பக்கத்தையும் JPGயாக மாற்ற

ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் பிடிஎப் கோப்புகளை தனித்தனி படமாக சேமிக்கலாம்.

பிடிஎப் கோப்புகளில் முக்கியமானதாக இருக்கும் பக்கங்களை படமாக சேமிப்பது எப்படி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஒரே நேரத்தில் நம்மிடம் இருக்கும் பிடிஎப் கோப்பை முழுமையாகவும் ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனி பக்கமாகவும் மாற்றிக் கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று Choose File என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் PDF கோப்பை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து Convert pdf to JPG என்பதை சொடுக்கினால் போதும்.

அடுத்து வரும் திரையில் எந்தப்பக்கம் நமக்கு PDF கோப்பாக வேண்டுமோ அந்த பக்கத்தின் அருகில் இருக்கும் Download என்பதை சொடுக்கி எளிதாக நம் கணணியில் தரவிறக்கலாம் அல்லது மொத்தமாக நாம் தேர்ந்தெடுத்த PDF கோப்பில் உள்ள அத்தனை பக்கங்களையும் Zip archive(படங்கள் சுருக்கப்பட்டதாகவும்) சேமிக்கலாம்.

எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை. ஓன்லைன் மூலம் சில நிமிடங்களின் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் சில நிமிடங்களிலே நாம் PDF கோப்புகளை JPG படங்களாக மாற்றி சேமிக்கலாம்.

இணையதள முகவரி

Mobile கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள


உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்

கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு

நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணணியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். நாளடைவில் குறிப்பிட்ட சில மென்பொருள்களை பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம்.

அவ்வாறு கணணியில் அதிகமான மென்பொருள்கள் இருக்கும். மேலும் ஒரே பயன்பாட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.

அவ்வாறு இருக்கும் மென்பொருள்களால் கணணியின் இயக்கத்தில் தடைப்படும். இவ்வாறு கணணியில் தேவையில்லாமல் இருக்கும் மென்பொருள்களை கணணியை விட்டு நீக்குவதற்கு விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது.

ஆனால் அது ஒரு சில மென்பொருள்களை சரியாக கணணியை விட்டு நீக்கம் செய்யாது. இவ்வாறு கணணியை விட்டு நீக்க முடியாத மென்பொருள்களை கணணியை விட்டு நீக்கம் செய்ய மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள் தான் Ainvo Uninstall Manager.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணணியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Find Programs என்னும் சுட்டியை அழுத்தி கணணியில் நிறுவப்பட்ட மென்பொருள்களை ஆராயவும். Remove Programs என்னும் சுட்டியை அழுத்தவும்.

அடுத்ததாக தோன்றும் விண்டோவில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை தேர்வு செய்து பின் Uninstall என்னும் சுட்டியை அழுத்தி கணணியை விட்டு அப்ளிகேஷனை நீக்கி கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் இயங்குதளத்தால் நீக்க முடியாத மென்பொருள்களையும் இந்த மென்பொருள் மூலமாக நீக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Microsoft இலவச தரவிறக்க மென்பொருள்

நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான். தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது.
Microsoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்
பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தரவிறக்க மென்பொருளை இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட். அதுவும் மிக அழகாகவும் Simple 'ஆகவும் வடிவமைத்து வழங்கியுள்ளது.

இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி பிரபலமாகாத இந்த மென்பொருளை தூசு தட்டி எடுத்து சில வசதிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.

Microsoft Download Manager என்ற இந்த மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது. இதன் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் அதிக அமைப்புகளை மேற்கொள்ளாமலும் தரவிறக்கலாம்.

மேலும் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் முடியும்(Pause downloading) பிறகு தேவைப்படுகிற போது மறுதொடக்கம்(Resume) செய்கிற வசதியும் இருக்கிறது.

இதில் எளிமையாக தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download என்பதைக் கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை கொப்பி செய்து இட்டால் போதுமானது. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியும் தரப்பட்டுள்ளது.

எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings இல் ஒரு தடவை அமைத்து விட்டால் போதுமானது. இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதள அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்


தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Monday, June 13, 2011

சிறந்த வலைதளம் அமைக்க

ஒரு சிறந்த வலைதளம் என்றால் இன்று உள்ள அனைத்து உலாவிகளிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருத்தல் வேண்டும். அதற்கு டேபிள்(table) உபயோகப்படுத்தாமல் டிவ்வை (div ) கொண்டு வடிவமைக்க வேண்டும். குறிப்பாக டிவ் உபயோகப்படுத்தும்போது குருப் முறையில் வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு டிவ்க்கும் கிளாஸ் அல்லது ஐடி கொடுத்து சி.எஸ்.எஸ் மூலம் முறையான தகவல் தந்து படிவங்களை மெருகேற்றலாம்.



இதற்க்கு தேவையான அகால உயரங்களை அளக்க, தேவையான வண்ணங்களை எடுக்க, ஒரு படத்தில் (image) இருந்து தேவையான பகுதிகளை கேப்சர் முறையில் பிரித்தெடுக்க என அனைத்து வேலைகளையும் இவ் இலவச மென்பொருள் மூலம் பெறலாம்.
இந்த மென்பொருளின் கொள்ளளவு வெறும் 404kb தான்.

இதை இங்கே தரவிறக்கம் செய்க